மென்பொருள்கள் இல்லாமல் கணினியின் வேகத்தை அதிகரிக்க
வாங்கிய புதிதில் கணினியில் வேகம் சூப்பராக இருக்கும்..அதுவே நாளாக நாளாக குறைந்துவிடும்..மென்பொருள் எதுவும் பயன்படுத்தாமலேயே கணினியின் வேகத்தை அதிகரிப்பது எப்படி? என்பதைப் பார்ப்போம்.
நீங்கள் விண்டோஸ் XP பயன்படுத்துபவர்கள் என்றால்...
Start=>Programs=>Run
நீங்கள் விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள் என்றால்...
Start=>Programs=>Search=>Run தேர்ந்தெடுக்கவும்.
ஆக... நீங்கள் Run Window வைத் திறக்க வேண்டும். இதற்கு குறுக்கிவிசை Star+R அழுத்தினாலே Run Window திறந்துகொள்ளும். இப்போது அதில் gpedit.msc என தட்டச்சிடுங்கள். புதிதாக ஒரு window open ஆகும். அதில்
Computer Configuration==>Administrative Templates==>Network==>Qos Packet Scheduler==>Limit Reservable Bandwidth என்ற வரிசையில் செல்லவும். இப்போது Not Configured என்பதில் டிக் மார்க் இருப்பதை கவனியுங்கள்.
இதை Enable என மாற்றிவிட்டு , Bandwith -ஐ 20 லிருந்து 0 க்கு மாற்றம் செய்துவிடுங்கள்.. அவ்வளவுதான்.. இனி உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்து பரிசோதித்துப் பாருங்கள்.. கணினி முன்பைவிட வேகமாக இயங்குவதை உணர முடியும்.
0 comments: