IRCTC தளத்தில் வேகமாக Ticket Booking செய்ய
உலகிலேயே மிகக் கடினமான விஷயம் எதுவென்று கேட்டால், இந்தியர்களின் பதில் IRCTC தளத்தில் ஒரே முறையில் டிக்கெட் புக் செய்வது என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு ஒரு கடினமான விஷயம் அது. அதில் டிக்கெட் புக் செய்யும் போது உங்களுக்கு உதவும் வகையில் ஒரு பயனுள்ள தகவல் ஒன்றை இன்று காண்போம்.
இந்த பதிவில் 9.30 க்கு லாக்-இன் செய்யுங்கள் என்று ஆரம்பித்து இதர விசயங்களை எல்லாம் சொல்லப் போவதில்லை. மாறாக ஒரே ஒரு ட்ரிக் மட்டும் தான் சொல்லப் போகிறேன்.
லாக் இன் செய்து, ரயிலை கண்டுபிடித்து புக் செய்யும் பக்கத்தில் தான் நமக்கு ஆரம்பிக்கும் பிரச்சினை, ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு புக் செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொருவரின் பெயரையும் கொடுத்து நாம் அவர்களின் வயது, பாலினம் என்று முடிப்பதற்குள் டிக்கெட்டுகள் முடிந்து விடும் வாய்ப்பு அதிகம்.
அதிலும் Payment பக்கத்தில் ஏதேனும் பிரச்சினை வந்து விட்டால் இன்னொரு முறை உங்களால் இந்த தகவலை வேகமாக நிரப்புவதற்குள் ரயில் அநேகமாக கிளம்பி இருக்கும். இதை தவிர்த்து புக் செய்யப்போகும் ஆறு பேருக்கும் ஒரே நொடியில் தகவல்களை நிரப்ப முடிந்தால், எப்படி இருக்கும்.
இந்த வசதியை இந்தியாவில் பிரபல தொழில்நுட்ப பதிவர் அமித் அகர்வால் கண்டுபிடித்துள்ளார். முதலில் Magic Autofill என்ற பக்கத்திற்கு செல்லுங்கள், இதை எங்கோ பார்த்தது போல உள்ளது என்று நினைக்கிறீர்களா, இது IRCTC தளத்தில் பயணிகள் தகவல் கொடுக்கும் பக்கத்தின் மாதிரி தான்.
இதில் பயணிகள் குறித்த தகவல்களை முதலில் நிரப்பி விடுங்கள். பின்னர் I’m Feeling Lucky என்பதை கிளிக் செய்து அதற்கடுத்து “Magic Autofill” என்பதை உங்கள் உலவியில் Drag செய்து Bookmark Toolbar பகுதியில் விடவும்.
கவனிக்க நீங்கள் இந்த பக்கத்தை Bookmark செய்யகூடாது. Firefox மற்றும் Chrome உலவியில் Bookmark Toolbar Enable செய்து இருக்க வேண்டும், அப்போது தான் இது அங்கே Add ஆகும்.
இப்போது IRCTC தளத்தில் பயணிகள் தகவலை நிரப்பும் போது இந்த Magic Fill என்பதை அழுத்தினால், அது ஒரே நொடியில் அனைவருக்கும் தகவல்களை நிரப்பி விடும்.
இது கூடுதலாக உள்ள Food, ID Card No, ID Card Type என்பதை குறித்த கவலை வேண்டாம், நீங்கள் புக் செய்யும் போது அது கேட்கப்படவில்லை என்றாலும் பிரச்சினை இல்லை.
இந்த Magic Autofill ஒரு Java Script ஆகும் நீங்கள் நிரப்பும் தகவல்கள் உங்கள் உலவியில் சேமிக்கப்படும், நீங்கள் கிளிக் செய்யும் போது IRCTC தளத்தில் உள்ள கோடிங் உடன் மேட்ச் ஆகி தகவல்கள் ஒரே நொடியில் நிரப்பப்பட்டு விடும்.

Howdy I am so happy I found your site, I really found you by mistake, while
ReplyDeleteI was searching on Askjeeve for something else, Nonetheless I am here now
and would just like to say cheers for a marvelous post
and a all round thrilling blog (I also love the theme/design), I don't have time to look over
it all at the moment but I have bookmarked it and also added in your RSS feeds, so when I have time I will be
back to read a lot more, Please do keep up the fantastic work.
my website: coltonk9masonjti.beeplog.com