Floating Facebook Widget

ஆன்லைனில் ஈசியாக பான் கார்ட் பெற வேண்டுமா?

வெவ்வேறு தேவைகளுக்கான, ஒரு அடையாள ஆவணமாக இந்தியர்கள் நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டையைப் பயன்படுத்துகின்றனர். வேலைசெய்யாத மற்றும் வரி தாக்கல் செய்யாத பலர், அடையாள ஆவண தேவைக்காக மட்டுமே இந்த பான் கார்டை வைத்துள்ளனர். இந்த கார்டின் தேவை சில வருடங்களாக அதிகரித்திருப்பதால், ஏராளமானோர் இதைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கின்றனர். இதன் காரணமாக, வருமான வரித் துறை பான் கார்ட் பெறுவதற்கான செயல்முறையை எளிமைபடுத்த முயன்று வருகிறது. ஆரம்ப நாட்களில் இடைத் தரகர்கள், குறிப்பாக சாட்டட் அக்கெளன்டன்டுகள் மூலமே இந்த பான் கார்டை பெறமுடிந்தது, ஆனால் இன்று இலகுவாக ஆன்லைன் மூலம் பான் கார்ட் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணபத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தெளிவான அறிவுறுத்தல்கள் மற்றும் வழிமுறைகள் கொடுக்கப்படுவதால், இது மிக எளிமையான மற்றும் இலகுவான செயல்முறையாகும். ஆன்லைன் மூலம் பான் கார்ட் விண்ணப்பம் செய்வதற்கான வழிமுறைகள் பின்வருமாறு;


இணையத்தளம் வருமான வரி பான் சேவைப் பிரிவின் பின்வரும் இணையத்தள முகரிக்குச் செல்லவும் - https://tin.tin.nsdl.com/pan/

பான் விண்ணப்பப் படிவம்

பான் விண்ணப்பப் படிவம் இது வருமான வரி பான் சேவைப் பிரிவு இணையத்தளத்தின் முதல் பக்கமாகும், இதில் புதிய பான் விண்ணப்பப் படிவம், தகவல் அறிதல், ட்ராக்கிங்க் ஸ்டேடஸ், பான் கார்ட் ரீ-பிரிண்ட் செய்தல் மற்றும் பான் கார்ட் விபரங்கள் மாற்றம் செய்தல் அல்லது திருத்தங்கள் செய்தல் ஆகிய தேர்வுகள் உள்ளன. விண்ணப்பதாரர் தனக்குப் பொருத்தமான ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும்.

படிவம் 49ஏ 

புதிதாக பான் கார்ட் விண்ணப்பம் செய்வதற்கு படிவம் 49ஏ ஐ பயன்படுத்த வேண்டும். https://tin.tin.nsdl.com/pan2/servlet/NewPanApp என்ற இணையத்தள முகவரியில், படிவம் 49ஏ ஐ ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்ய முடியும். கேட்கப்பட்டிருக்கும் விபரங்களை பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்கவும். ஆன்லைன் மூலம் இந்த படிவம் சரியான முறையில் சமர்ப்பிக்கப் பட்ட பின்னர், இதற்கான அக்னாலேஜ்மென்ட், டிஸ்ப்ளே செய்யப்படும். இதில் 15 இலக்க அக்னாலேஜ்மென்ட் நம்பர் இருக்கும். அடுத்தடுத்த செயல்முறைக்காக இந்த அக்னாலேஜ்மென்டைப் பிரிண்ட் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆவணங்களை இணைத்தல் 

இந்த அக்னாலேஜ்மென்ட் படிவம் வருமான வரித்துறைக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும். இதை அனுப்புவதற்கு முன்னர் இதனுடன் முகவரிச் சான்று மற்றும் அடையாள சான்று ஆகிய முக்கிய ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். இந்த ஆவணங்களில் உங்கள் பெயர் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதோ, அதே போலவே பான் விண்ணப்ப படிவத்திலும் இருக்க வேண்டும். ஆகவே படிவம் 49ஏ ஐ பூர்த்தி செய்யும் போது மிக கவனமாக இருக்கவும்.

புகைப்படம்

சமீபத்தில் எடுத்த இரண்டு கலர் புகைப்படங்களை, இந்த அக்னாலேஜ்மென்ட் படிவத்தில் அதற்கென கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஒட்ட வேண்டும். அதே போல் குறிக்கப்பட்ட இடங்களில் கையெழுத்திட வேண்டும். நீங்கள் ஒட்டும் புகைப்படமே உங்கள் கார்டில் பிர்ண்ட் செய்யப்படுவதால், இந்த புகைபடங்கள் அண்மையில் எடுத்ததாகவும். தெளிவானதாகவும் இருக்க வேண்டும்.

இதற்கான கட்டணம் வெறும் ரூ.96

தான் உங்கள் தொடர்பு முகவரி இந்தியாவுக்குள் இருந்தால். நீங்கள் பான் விண்ணப்பத்திற்காக ரூ.96/- கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை பின்வரும் முறைகள் மூலம் செலுத்தலாம் - காசோலை, டிமான்ட் ட்ராப்ட், இன்டர்நெட் பாங்கிங், கிரடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட். தொடர்பு முகவரி வெளிநாட்டு முகவரியாக இருந்தால், ரூ.962/- கட்டணமாக செலுத்த வேண்டும் மற்றும் இந்த தொகை டிமான்ட் ட்ராப்ட் மூலம் செலுத்தபட வேண்டும். ஒரு வேளை, இன்டர்நெட் பாங்கிங், கிரடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் மூலம் செலுத்த விரும்பினால், விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யப்படும் போதே செலுத்த வேண்டும், இதற்கு பேமென்ட் அக்னாலேஜ்மென்ட் கொடுக்கப்படும். இதை பிரிண்ட் செய்து அக்னாலேஜ்மென்ட் படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

15 நாட்கள் மட்டுமே

ஆகவே அக்னாலேஜ்மென்ட் படிவத்துடன் - புகைப்படங்கள், முகவரிச் சான்று, அடையாளச் சான்று மற்றும் கட்டணதொகை/ கட்டணம் செலுத்தப்பட்டதற்கான சான்று ஆகியவை இணைந்திருக்க வேண்டும். இது விண்ணபித்த தேதியிலிருந்து 15 நாட்களுக்குள், பூனாவிலுள்ள என்எஸ்டிஎல் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். இதை அனுப்பும் போது அஞ்சல் உறையின் மீது ‘அப்ளிகேஷன் ஃபார் பான்- அக்னாலேஜ்மென்ட் நம்பர்' என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். கட்டணத் தொகை கிடைத்த பின்னர், என்எஸ்டிஎல், விண்ணப்பத்தை ஃப்ராசஸ் செய்யும் அதாவது காசோலை அல்லது டிமாண்ட் ட்ராஃப் மூலம் கட்டணம் செலுத்தப்பட்டால், பேமென்ட் கிளியர் ஆகும் வரை காத்திருக்க வேண்டும்.

ஆப்ளிகேஷன் டிரக்கிங் 

அக்னாலேஜ்மென்ட் படிவத்தை அனுப்பிய பின்னர், ஆன்லைன் மூலம் உங்கள் விண்ணப்ப ஸ்டேடஸ் பற்றி தெரிந்து கொள்ள முடியும். கட்டணம் செலுத்தப்பட்ட விபரங்களையும் ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம். என்எஸ்டிஎல் முகவரிக்கு எழுதுவதன் மூலம் அல்லது 57575 என்ற நம்பருக்கு - என்எஸ்டிஎல்பான் - இடைவெளி - அக்னாலேஜ்மென்ட் நம்பர் டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமும் ட்ராக்கிங் செய்யும் வசதியை என்எஸ்டிஎல் வழங்குகிறது.

விபரங்களை மாற்றுதல் அல்லது திருத்தம் செய்தல் 

உங்களிடம் ஏற்கனவே உள்ள பான் கார்ட் விபரங்களை மாற்றுவதற்கு அல்லது திருத்தம் செய்வதற்கான செயல்முறை, புதிய பான் கார்ட் விண்ணப்பம் செய்யும் முறையை ஒத்தது. இதற்கு வருமான வரித்துறையின் பான் சேவைப் பிரிவு இணையத்தள முகப்பில் உள்ள "பான் விபர மாற்றங்கள் அல்லது திருத்தங்கள்" என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் பான் மாற்ற வேண்டுகோள் படிவத்தை பூர்த்தி செய்வதற்கு மேலே குறிப்பிட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றவும். இந்த பான் மாற்ற வேண்டுகோள் பிரிவிலும், தனிப்பட்ட வழிமுறைகள், அறிவுறுத்தல்கள் மற்றும் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை ஆகிய அனைத்தும் கொடுக்கபட்டிருக்கும்.

இனிமேல் ஈசியாக பான் கார்ட் பெறலாம் 

ஆகவே நீங்கள் இனிமேல் பான் கார்ட் பெறுவதற்கு வேறு ஒருவரை அல்லது உங்களுக்கு தெரிந்த ஒருவரை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. மேலே கூறப்பட்ட ஸ்டெப்புகளை பின்பற்றி பான் கார்டை இலகுவாக பெற்றுக்கொள்ளுங்கள். மேலே கூறப்பட்டுள்ள நடைமுறைகள் எளிதாக மற்றும் சுயமாக புரிந்து கொள்ளும் விதத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. போதிய அறிவுறுத்தல்கள், வழிமுறைகள் மற்றும் செய்ய வேண்டியவை, செய்ய கூடாவை ஆகிய அனைத்து விபரங்களும் பான் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் போது, இணையத்தளத்தில் உங்களுக்கு தெளிவாக கொடுக்கப்படும்.
Download As PDF

0 comments:

சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதல்களை இனி ஆன்லைன் மூலம் பெறலாம்

சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதல்களை இனி ஆன்லைன் மூலம் பெறலாம்.தமிழ்நாடு இப்பொழுது "e-District" ஆகி விட்டது.இனிமேல் நீங்கள் வி.ஏ.ஒ , ஆர்.ஐ , தாசில்தார் இவர்களை நேரில் பார்க்காமல் ஆன்லைன் மூலம் சாதிச் சான்றிதல், இருப்பிடச் சான்றிதல்,வருமானச் சான்றிதல், No Graduate போன்றச் சான்றிதல்களை பெற முடியும்.




இணைய முகவரி: http://edistrict.tn.gov.in/ 
Download As PDF

0 comments:

மொபைல் நம்பர் தெரியாமல் மறைக்க

 ஒரு மொபைல் நம்பரிலிருந்து  நண்பர்களின் மொபைல்களுக்கு அல்லது மற்றவர்களின் அலைப்பேசிக்கு அழைக்கும்பொழுது அந்த மொபைல் நம்பர் நண்பர்களுக்குத் தெரியாமல் மறைப்பதற்கு இப்போது டெக்னிக் (Mobile Number Hiding Technical) வந்துவிட்டது.

அதாவது நீங்கள் உங்கள் நண்பரின் மொபைல் போனுக்கு அழைக்கும்போது அவரின் மொபைல் போனில் உங்களுடைய மொபைல் நம்பர் தெரிவதற்குப் பதில் Private Number என்று மட்டும் வரும்.  உங்களுடைய மொபைல் நம்பர் அவருடைய செல்போனில் தெரியாது.


உங்களுடை மொபைல் நம்பர் 9865072896 எனில் அதனுடன் *67 என்ற எண்ணையும் உங்கள் மொபைல் எண்ணுடன் சேர்த்து டயல் செய்யுங்கள்.

இது ஒரு யுனிவர்சல் கோட். அதனால் உங்களது மொபைல் எண்  *67 9865072896 என்று டயல் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது எண்களுக்கிடையே இடைவெளி விடாது  இருக்க வேண்டும். அவ்வாறு இடைவெளி விடாமல் சரியாக உள்ளிட்டு டயல் செய்யும்போது உங்களுடைய எண் ஏற்றுக்கொள்ளப் படமாட்டார்கள்.

இவ்வாறு செய்யும்பொழுது உங்களுடைய எண் நீங்கள் அழைக்கும் நபருக்கு டிஸ்பிளே (Display) ஆகாது.  மீண்டும் உங்களுடைய எண் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் எனில் *82 என்ற எண்ணைச் சேர்த்து டயல் செய்தால் போதுமானது. பிறகு உங்களுடைய மொபைல் நம்பர் (Android Mobile Number) மீண்டும் பழையபடி மற்றவர்களின் மொபைல்களில் டிஸ்பிளே ஆகும்.

இதே முறையை இப்படியும் செய்யலாம்.

நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நெட்வொர்க்கின் கஸ்டமர் கேர்க்கு (Customer Care) போன் செய்து லைன் பிளாக் பிளாக் (line) வசதியை நீங்கள் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என சொன்னால் போதுமானது. அவர்கள் அந்த வசதியை உங்களுக்கு ஏற்படுத்தித் தருவார்கள்.

மீண்டும் இந்த வசதி உங்களுக்கு வேண்டாமென நினைத்தால் , மீண்டும் கஸ்டமர் கேருக்கு போன் செய்து அவர்களிடம் இந்த லைன் பிளாக் வசதி எனக்கு வேண்டாம் என நீங்கள் கூறி, அந்த வசதியை நீக்கிவிடலாம்.

முக்கிய குறிப்பு: 

இந்த வசதியின் மூலம் உங்களுடைய மொபைல் நம்பரானது மற்றவர்களின் மொபைல்களில் தோன்றால் பிரைவேட் நம்பர் (Private Number) என்று மட்டுமே தோன்றும்.. மற்றபடி நீங்கள் இந்த வசதியின் மூலம் பேசுவது யார்.. எந்த எண்ணிலிருந்து பேசுகிறார்கள்.. எங்கிருந்து பேசுகிறார்கள் என்பதையெல்லாம் மறைக்க முடியாது. எனவே இந்த வசதியைப் பயன்படுத்தி தவறான நடவடிக்கைகளில், தவறான வழிமுறைகளில் செல்ல நினைத்தால் நிச்சயம் சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொள்வீர்கள்.

பெரிய பெரிய நிறுவனம் அல்லது வியாபார நிமித்தமாக (Business Related Calls), உங்களுடைய எண் மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்று நினைப்பவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.
Download As PDF

5 comments:

உலகின் மிகப்பெரிய தொலைக்காட்சி LG 77 4k Ultra HD OLED

உலகின் மிக பிரபலமான தொலைக்காட்சி நிறுவனம் LG. இந்நிறுவனம் தனது புதிய தொலைக்காட்சியை வெளியிட்டுள்ளது.

தொலைக்காட்சியின் பெயர்:  LG 77 4k Ultra HD OLED 



 LG 77 4k Ultra HD OLED ன் சிறப்பம்சங்கள்: 

  • 77 அங்குலம் உடையது.
  • Ultra High Definition தொழில்நுட்பம்
  • இதன் விலை சுமார் ரூபாய் 20000 டாலர் (உண்மையான விலை வெளியிடபடவில்லை)

தொலைக்காட்சியின் சிறப்பு:

எந்த திசையில் அமர்ந்து பார்த்தாலும் துல்லியமான படத்தை கொடுக்கக்கூடியது என்றும், தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்திருக்கும் போது காட்சிகள் கண்களுக்கு தூர இடைவெளி வித்தியாசமில்லாமல் ஒரே தூரத்தைக் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக LG நிறுவனம் அறிவித்துள்ளது.

எதிர்பார்க்கப்படும் விலை: 

இதற்கு முன்பே LG நிறுவனம் 55 அங்குல திரை அகலம் கொண்ட தொலைக்காட்சியை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ரூபாய் 15 ஆயிரம் டாலர்.  எனவே கூடுதலான அகலம் கொண்டிருக்கும் இந்த தொலைக்காட்சியின் விலை சற்றேறக்குறைய 20000$ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Download As PDF

0 comments:

சோனியின் புதிய ஸ்மார்ட் கேமரா--மொபைல் போனுடன் சேர்த்து பயன்படுத்தலாம்...!

சோனி நிறுவனம் தனது புதிய கேமராக்களை ( Qx10 மற்றும் Qx100) நேற்று அறிமுகப்படுத்தியது.   இந்த கேமிராக்கள் ஸ்மார்ட் போனுடன் இணைந்து தொழிற்படும் விதத்தில்  அமைக்கப்பட்டுள்ளது .

இவை பார்ப்பதற்கு மிகவும் மெல்லியதாகவும், ஸ்மார்ட்போனில் வயர்லஸ் முறையில் இணைத்து துல்லியமான காட்சிகளைப் பார்த்து (real-time viewfinder) படமெடுக்கும்  விதத்திலும் அமைந்துள்ளது.




இந்த QX கேமிரா தொகுப்பானது சோனி நிறுவனத்தின் PlayMemories Mobile அப்ளிகேஷனில் இயங்ககூடியகூடியதாக உள்ளது. அதனுடன் இது ஸ்மார்ட் போன் டிஸ்பிளே மூலம் ஒரு Image Shooter ஆகவும் பயன்படுகிறது. இதன்மூலம் வீடியோ ரெக்கார்டிங், போட்டோ adjustment settings, shooting mode, zoom, auto focus ஆகிய வேலைகளையும் செய்யலாம்.

இப்புதிய Qx10, Qx100 கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட போட்டோக்களானது ஸ்மார்ட் போன் அல்லது Sony-QX-camera வில் ஸ்டோர் செய்யப்படுகிறது. எடுக்கப்பட்ட போட்டோக்களை சமூக வலைத்தளங்களிலும் உடனடியாக பகிரும் வசதியும் இதில் உள்ளன.

ஸ்மார்ட் போனை இந்த Qx unit பின்புறத்தில் இணைத்தும் பயன்படுத்தலாம். தனியாக ஒரு ஸ்டேன்ட் அலோன் கேமராவாக (Stand Alone) தூரத்திலிப்பவைகளையும் படம் பிடிக்க முடியும்.

இந்த இரண்டு கேமராக்களிலும் shutter release, memory card, battery ஆகியனவும் உள்ளது.

Sony Qx100 கேமராவில்  உள்ள சிறப்பம்சங்கள்:


1. one-inch 20.2 megapixel Exmor RCMOS sensor
2. Cyber-shot RX100 II camera
3. ultra-low-noise images
4. Carl Zeiss Vario-Sonnar T lens  (3.6x optical zoom)
5. Manual focus and zoom adjustments

QX10 கேமராவின் சிறப்பம்சங்கள்: 

1. 18.2MP Exmor RCMOS sensor 
2. Sony G Lens with a 10x optical zoom
3. supports image stabilization
4. shooting modes (Program Auto, Intelligent Auto and Superior Auto)
Download As PDF

0 comments:

back to top