Floating Facebook Widget

இன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி

இந்த உலகத்துல பணம் சம்பாரிக்க ஆயிரம் வழி இருக்குங்க. அந்த ஆயிரத்துல ஒன்னு தான் இன்டெர்நெட்ல பணம் சம்பாரிக்கும் முறை.

பொதுவாவே, இப்போ இன்டெர்நெட் பயன்பாடு மக்கள் கிட்ட ரொம்ப அதிகமா ஆகிடிச்சு. இன்டெர்நெட் பற்றிய விழிப்புணர்வு எல்லோர்கிட்டையும் இருக்கு.


நம்ம பொதுவா இன்டெர்நெட்ட எதாவது ஒரு விஷியத்தை பற்றி தெரிஞ்சிக்க, நண்பர்கள் கிட்ட பேச இல்லனா டைம் பாஸ் பண்ண பயன்படுத்துவோம். இதே மாதிரி இன்டெர்நெட்ல பணமும் சம்பாதிக்கலாம். அதற்கான சில வழிகள் தான் நம்ம பாக்க போறோம்.

நீங்க உங்களோட ஓய்வு நேரத்துல கூட இத செய்யலாம். அது என்ன வழிகள் என்று கிழே இருக்கும் வழிகளை பாருங்க.



1. புத்தகம் 
உங்களுக்கு புத்தகம் எழுதி வெளியிடனும்னு ஆசை இருக்கா. அமேசான் நிறுவனம் இதற்க்கு ஒரு வழி சொல்றாங்க. அமேசான் நிறுவனத்தின் இலவச சேவையான கிண்டில் டைரக்ட் பப்ளிஸிங் ல நீங்க உங்களோட புத்தகத்த வெளியிடலாம். அவங்க உங்களுக்கு புத்தக விற்பனைல இருந்து ராயல்ட்டி பணம் கொடுப்பாங்க.




2. மொபைல் அப்ளிகேசன் 
ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற சாதனங்களுக்கு புது அப்ளிகேசன்கல உருவாக்கி நீங்க ஆன்லைன்ல விற்பனை செய்யலாம்.



3. போட்டோ சேல்ஸ் 
www.shutterstock.com, www.shutterpoint.com, www.istockphoto.com இந்த இணையதளங்களுக்கு நீங்க எடுத்த போட்டோவஅனுப்புங்க, உங்களோட போட்டோ சேல்ஸ்ல இருந்து உங்களுக்கு 15% -85% வரைக்கும் ராயல்ட்டி பணம் கொடுப்பாங்க.



4. பழைய பொருள் விற்பனை
www.olx.in, www.quickr.com and http://craigslist.co.in இந்த இணையதளங்களில் வீட்ல இருக்க பழைய பொருள்கள விற்பனை செய்யலாம்.


5. ஆன்லைன் ஷாப் 
www.ebay.in, www.indiebazaar.com இது போன்ற ஆன்லைன் ஷாப்களை உருவாக்கி பொருட்களை விற்பனை செய்யலாம்.


6. ஆன்லைன் ஒர்க் 
www.odesk.com, www.elance.com and www.mturk.com/mturk இந்த இணையதளங்களில் பதிவு செய்து ஆன்லைனில் வேலை செய்து பணம் பெறலாம். இதில் நீங்கள் உங்கள் திறமையை நிரூபிப்பதின் மூலம் நிறைய பணம் மற்றும் வாடிக்கையாளர்களை பெறலாம்.


7. கற்பித்தல் 
நீங்கள் எதாவது ஒரு பாடத்தில் திறமையானவர்களாக இருந்தால் உங்களுக்கு கற்பிக்கும் அனுபவம் இருந்தால், www.2tion.net , www.tutorvista.com இந்த இணையதளங்களில் பதிவு செய்து ஆன்லைனில் பாடம் நடத்தலாம்.



8. ஆன்லைன் விளம்பரம் 
www.google.com/adsense , www.adbrite.com, இந்த இணையதளத்தில் பதிவு செய்து நீங்கள் ஆன்லைனில் விளம்பரம் செய்யலாம். உங்கள் விளம்பரத்தை எத்தனை பேர் பார்கின்றனர், விரும்புகின்றனர் என்பதை வைத்து பணம் வரும்.
Download As PDF

4 comments:

back to top