Floating Facebook Widget

உங்கள் குடும்பத்தினர் அனைவரின் உடல் நலம் குறித்து அறிய உதவும் இணையதளம்

உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் அவர்களின் உடல் நலம் குறித்து தகவல் அறியவும்,
பொதுவான உடல் நலம் பாதுகாக்க என்ன செய்திட வேண்டும் எனவும், ஒரு குடும்ப டாக்டர் கூறக் கூடிய அறிவுரைகள் அனைத்தையும் தாங்கி உள்ளது http://familydoctor.org/familydoctor/en.html என்ற முகவரியில் உள்ள தளம். இதன் பெயரே Family Doctor என்பதுதான்

இந்த தளத்தை நான் விரும்பிப் பரிந்துரைக்கக் காரணம், எளிதில் இதில் தகவல்களைப் பெறும் வகையில் வடிவமைப்பு கொண்டிருப்பதுதான். Home, Conditions A to Z, Women, Men, Smart Patient Guide, Parents & Kids, Healthy Living, Senior Living, and OTC Guide எனப் பல பிரிவுகளில் தகவல்களைப் பெறலாம். இந்த டேப்களுக்கு மேலாக, தேடல் தளம் ஒன்று தரப்பட்டுள்ளது. இதில் நாம் தேட விரும்பும் தகவல் குறித்து டைப் செய்து, அருகே உள்ள பச்சை வண்ண அம்புக் குறியை அழுத்தினால் போதும். தகவல்கள் கிடைக்கின்றன.
இதன் முதன்மைப் பக்கத்தில் நம் உடல்நிலை எப்படி உள்ளது என்று என்ற பிரிவில் கொடுத்து தகவல் பெறலாம். நம் நிலை குறித்த எழுத்தினைக் கிளிக் செய்து, அதில் நம் நிலை குறித்து கொடுக்கப் பட்டுள்ளதா என அறியலாம். இதற்கும் மேலாக, இதன் இடது பக்கத்தில் ஹெல்த் டிப்ஸ்கள் வழங்கப்படுகின்றன. கூடுதலாக, நோய் அறிகுறி, நோய் அகராதி, மருந்து குறித்த தகவல்கள் எனவும் தகவல்களைப் பெறலாம்.
பட்டியலின் கீழாக, டேப்களில் கொடுக்கப் பட்டிருப்பது போல, சில வகைத் தலைப்புகள் தந்திருப்பதனைக் காணலாம். நமக்கும் நம் குடும்ப உறுப்பினர்களுக்கான உடல்நலம் மற்றும் நோய் குறித்த சிறந்த ஓர் தளமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
Download As PDF

0 comments:

back to top