Floating Facebook Widget
Showing posts with label android. Show all posts

Samsung galaxy s5 வந்துவிட்டது

1 comments
மொபைல் சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சாம்சங், தனது நவீன கேலக்ஸி எஸ் 5 ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. ஆன்ட்ராய்டில் இயங்கும் இந்த போன் தோற்றத்தில் கேலக்ஸி எஸ் 4 போலவே இருக்கும். 5.1 இன்ச் சூப்பர் அமோலெட் திரை கொண்டது. 2.5 கிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர், 2 கி.பி ரேம் மற்றும் தண்ணீர் எதிர்ப்பு திறன் போன்றவை இதன் சிறப்பு அம்சங்கள். 16 ஜிபி மற்றும் 32 ஜிபி இடவசதி கொண்டதாக இருக்கும்.மேலும் மைக்ரோ மெமரி கார்டு மூலம் 64 ஜிபி வரை இடவசதியை நீட்டித்துக்கொள்ளலாம். ஆப்பிள் நிறுவனத்தின் 5எஸ் மாடலுக்கு போட்டியாக இது கருதப்படுகிறது. இதற்கு ஏற்ப, உடல் நலத்துடன் தொடர்புடைய ஹெல்த் 3.0 மற்றும் பயோமெட்ரிக் சென்சார் பட்டன் உள்ளிட்ட கூடுதல் வசதிகள் கேலக்ஸி எஸ்5ல் சேர்க்கப்பட்டுள்ளன.

சாம்சங் நிறுவனம் தனது முக்கிய போன் மாடல்களை வேர்ல்டு மொபைல் காங்கிரஸ் நடந்த பிறகுதான் வெளியிடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஸ்பெயினில் பார்சிலோனாவில் நடந்த வேர்ல்டு மொபைல் காங்கிரசில் வெளியிட்டுள்ளது. போட்டிகள் அதிகம் இருப்பதால் தனது எஸ்4 மாடலுக்கு மாற்றாக விரைவில் புதிய மாடல் கொண்டுவரவேண்டும் என்பதற்காக முன்னதாகவே வெளியிட்டு விட்டது. இதன் விலை விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த போன் வரும் ஏப்ரல் 11ம் தேதி முதல் இந்தியா உட்பட 150 நாடுகளில் விற்பனைக்கு வரும்.

Read More »

இலவசமாக call / sms மற்றும் group voice chat செய்ய

0 comments
பல இலவச சர்வீஸ் ஆப்ஸ்களை அவ்வபோது கூறி வந்தாலும் நிறைய பேருக்கு அது உபயோகமில்லாமல் போகும் காரணம் அது இந்தியாவில் இல்லாமல் அல்லது தரவிறக்கம் செய்ய முடியாமல் போவது.


இந்த செட்பேக்கை போக்கும் வண்ணம் "LINE" எனப்படும் இலவச கால் / மெசேஜ் / ஸ்டிக்கர்ஸ் / குருப் வாய்ஸ் சாட் போன்ற சர்வீஸ் இலவசமாக இந்தியாவில் கிடைக்கும். இந்த சேவை 2011 ஆம் ஆண்டு ஜப்பானின் பூகம்பம் நடந்த பிறகு எல்லா நெட்வொர்க்கும் ஜாம் ஆனதால் மாற்று கண்டுபிடிப்பே இது.

இதன் மூலம் உங்களுக்கு நிரைய காசு மிச்சமாகும். இதற்க்கு மொபைல் நெட்வொர்க் தேவையில்லை வெறும் இன்டர்னெட் 2ஜி / 3ஜி அல்லது வை ஃபை இருந்தால் ஒகே ஒகே - அப்புறம் என்ன லைன் போட வேண்டியது தானே - இது மொபைல் / ஸ்மார்ட் போன் மற்றூம் உங்கள் கணணிக்கும் இலவசம்.

Android- download
windows- download

இதை nokia , blackberry, iphone, மற்றும் mac கிலும் பயன்படுத்தலாம் .

Read More »

Android gameகளை இலவசமாக தரவிறக்க சிறந்த 4 இணையதளங்கள்

1 comments
இப்பொழுது Android மொபைல் களை பெரும்பாலும் வாங்கும் காரணங்களின் ஒன்று , அது ஒரு பெரிய gaming இயந்திரம் . அதில் எண்ணற்ற game களை install செய்து விளையாடலாம் . அதை தரவிறக்க நாம் google play வை பயன்படுத்துகிறோம் , ஆனால் அதில் சில game கள் மட்டும் தான் இலவசமாக தரவிறக்க முடியும் . அதனால் அனைத்து game களையும் இலவசமாக தரவிறக்க google play க்கு மாற்றாக சில சிறந்த பாதுகாப்பான இணையதள முகவரியை கீழே கொடுத்துள்ளேன் .
Tegrazone

This website is powered by the Official company of NVidia. It introduces a big list of Free games and Paid Games to download with simple clicks. It also provides Download via QR Code, which make it simpler.


AndroidShock

Great website that gathers a huge list of APK Games (Free & Paid). It provides low price games to Download (direct link), Send directly to Phone, or Send link to Email.



Android Games Room


One of the best Alternatives to Google Play, it provides Direct Download Link and Download via QR Code. This website is auto-Updated weekly with more New Games & Apps. It provides a big list of FREE Games.


Android.Mob.Org


A great-looking website it provides Android Games & Apps Download, Direct Download Link for APK, QR Code download or even WAP Download. This great website is one of the best android app store especially for tablets.

Read More »

Android மொபைலுக்கு இலவச AVAST antivirus

0 comments
அவாஸ்ட் ஆண்டிவைரஸ் மென்பொருளை பற்றி பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பீர்கள். கணினிகளை வைரஸ் மற்றும் மால்வேர்களில் இருந்து கணினியை பாதுகாக்க உதவும் மிகச்சிறந்த இலவச ஆன்டிவைரஸ் மென்பொருளாகும். கணினி உலகில் சிறந்த இடத்தை தக்க வைத்துள்ள இந்த ஆன்டிவைரஸ் மென்பொருள் இப்பொழுது மொபைல் உலகிலும் கால் வைத்துள்ளது. முதலாவதாக பல்வேறு வசதிகளுடன் கூடிய இலவச ஆன்டிவைரஸ் மென்பொருளை ஆன்ராய்ட் மொபைல்களுக்காக வெளியிட்டுள்ளது அவாஸ்ட் நிறுவனம். இந்த புதிய ஆன்ராய்ட் ஆன்டிவைரஸ் மென்பொருளில் பல்வேறு வசதிகள் உள்ளது.
மென்பொருளில் உள்ள வசதிகள்:
Antivirus Production- Real time Production, Custom Updates
Web Shield
Call / SMS filter
Anti-Theft Features - Remote Lock, Remote memory wipe, sim card change notification, Remote siren
Firewall
Application Manager
இது போன்ற மேலும் பல வசதிகள் உள்ளது அனைத்தும் இலவசமாகவே உபயோகித்து கொள்ளலாம்.

கீழே மற்ற மென்பொருட்களுக்கும் அவாஸ்ட் மென்பொருளுக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள்.



பணம் கொடுத்து வாங்கும் மென்பொருளில் இல்லாத வசதிகள் கூட இந்த ஆன்ராய்ட் அவாஸ்ட் ஆன்ட்டி வைரஸ் மென்பொருளில் உள்ளது.


இந்த மென்பொருளை Avast for android இந்த லிங்கில் சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். கணினியில் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்யும் பொழுது உங்கள் கணினியோடு உங்கள் ஆன்ராய்ட் மொபைல் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

அல்லது உங்கள் மொபைலில் www.avast.com/android என்ற தளத்திற்கு சென்று டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.


Read More »

உங்கள் phoneனுடன் பேச வேண்டுமா-speaktoit assistant

0 comments
 இன்று நாம் அறிந்துகொள்ளவிருக்கும் ஒரு புதிய மென்பொருள் Speaktoit என்பதாகும். இது ஆண்ட்ராய்ட் போனில் பயன்படுத்தும் மென்பொருளாகும். இந்த மென்பொருளைப் பயன்படுத்தி ஆண்ட்ராய்ட் போனில் குரல் மூலமாக எந்த ஒரு செயலையும்  மேற்கொள்ள முடியும். 
இணையத்தில் தேடவும், ஆன்ட்ராய் மார்க்கெட்டில் வேண்டிய மென்பொருளை தேடிப்பெறவும், இணையத்தில் தேடுதல் உள்ளிட்ட பல்வேறு செயல்களை மேற்கொள்ளவும் இந்த மென்பொருள் பயன்படுகிறது. 

மேலும் உங்களுடைய ஆண்டாராய்ட் போனில் நீங்கள் மேற்கொள்ளும் அழைப்புகள் உள்ளிட்ட செயல்களையும் வாய் மொழி மூலம் உத்தரவு பிறப்பித்து செய்ய முடியும். இதற்கு ஆங்கிலத்தில் Voice Command என்று பெயர். இவ்வாறு வாய்ஸ் கமாண்ட் மூலம் உங்களுடைய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனுக்கு உத்தரவு பிறபித்து ஆண்ட்ராய்ட் போனை இயக்க வைக்கலாம்.இந்த video வை பார்த்தல் உங்களுக்கே புரியும் .


இதுபோன்ற செயல்களைச் செய்ய பயன்படும் மென்பொருள்தான் Speaktoit என்பதாகும். 

Read More »

ஆன்ட்ராய்ட் மற்றும் விளையாட்டு அப்ளிகேஷன்களை கணினியில் இயக்க

0 comments
தற்போது மொபைல் தொழில்நுட்பத்தின் புரட்சி ஆன்ட்ராய்ட்  மொபைல் இயங்குதளம் ஆகும். இந்த ஆன்ட்ராய்ட் மொபைல் இயங்குதளம் தற்போது கூகுள் வசம் உள்ளது. ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தில் செயல்படும் வகையில் லட்சகணக்கான அப்ளிகேஷன்களும் மற்றும் விளையாட்டு அப்ளிகேஷன்கள் ஆன்ட்ராய்ட் சந்தையில் கிடைக்கிறது. இதனை நாம் இலவசமாகவும் மற்றும் விலைகொடுத்து வாங்கியும் பயன்படுத்திக்கொள்ள முடியும். இவ்வாறு உள்ள அப்ளிகேஷன்களை ஆன்ட்ராய்ட் இயங்குதளம் கொண்ட சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனை கணினியில் இயக்க வழி இருக்கிறதா என்றால் கண்டிப்பாக வழி உண்டு. இதற்கு BLUESTACKS என்னும் மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க bluestacks.com 



மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவவும். இணைய இணைப்பு இருந்தால் மட்டுமே இந்த மென்பொருளை கணினியில் முழுமையாக நிறுவ முடியும். 


இந்த மென்பொருள் விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, ஏழு மற்றும் எட்டு ஆகிய இயங்குதளங்களில் இயங்கும். மேலும் மேக் இயங்குதளத்திற்கும் இந்த மென்பொருள் இருக்கிறது. BLUESTACKS மென்பொருளை கணினியில் முழுதாக நிறுவியவுடன் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொண்டு BLUESTACKS அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.

பின் தேடு சுட்டியை அழுத்தி எந்த மென்பொருள் வேண்டுமோ அதை தேடி பின் கணினியில் உள்ள BLUESTACKS அப்ளிகேஷன் உள்ளே நிறுவிக்கொள்ள முடியும். 

இந்த BLUESTACKS அப்ளிகேஷனில் மேலும் ஒரு வசதி உள்ளது, ஆன்ட்ராய்ட் இயங்குதளம் கொண்ட மொபைல் சாதனத்தை இதனுடன் இணைத்துக்கொள்ள முடியும். இதற்கு Setting ஐகானை அழுத்தி தோன்றும் விண்டோவில் Cloud Connect என்பதை தேர்வு செய்யவும்.



அடுத்து தோன்றும் விண்டோவில் Yes என்னும் ஆப்ஷன் பட்டியை  தேர்வு செய்து Next எனும் பொத்தானை அழுத்தவும்.

 அடுத்து தோன்றும் விண்டோவில் மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்னை உள்ளிட்டு Register எனும் பொத்தானை அழுத்தவும்.
 அடுத்து வரும் விண்டோவில் பின் நம்பர் வரும் அதை குறித்து வைத்துக்கொள்ளவும். பின் ஆன்ட்ராய்ட் மொபைல் போனில் Play Store னை ஒப்பன் செய்யவும்.

 அடுத்து தோன்றும் விண்டோவில் BlueStacks Cloud Connect என்று உள்ளிட்டு தேடவும். வரும் முடியும் குறிப்பிட்ட மென்பொருளை ஆன்ட்ராய்ட் மென்பொருளில் நிறுவிக்கொள்ளவும்.

 பின் BlueStacks அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் அந்த பின் என்னை குறிப்பிட்டு Login பொத்தானை அழுத்தவும்.

 சிறிது நேரம் கழித்து ஒரு விண்டோ ஒப்பன் ஆகும். அதில் மொபைல் போனில் உள்ள எந்தெந்த அப்ளிகேஷன்களை கணினியில் உள்ள BlueStack அப்ளிகேஷனுடன் இணைக்க வேண்டுமோ அதை தேர்வு செய்து பின் Sync என்னும் பொத்தானை அழுத்தவும்.

மொபைல் போனில் இணைய இணைப்பு வேகமாக இருந்தால் விரைவாக பதிவேற்றம் ஆகும்.

 அடுத்து கணினியில் BlueStacks அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். ஒப்பன் செய்தவுடன். மொபைல் போன் மற்றும் கணினி இரண்டிலும் இணைய இணைப்பு இருக்கும் பட்சத்தில் மொபைல் போனில் உள்ள அப்ளிகேஷன்கள் அனைத்தும் கணினியில் உள்ள BlueStack அப்ளிகேஷனில் ஒரு நகல் இருக்கும். 
 மொபைல் போனில் உள்ள அப்ளிகேஷன்களை இப்போது கணினியிலும் எளிதாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.


Read More »
back to top