Floating Facebook Widget

Samsung galaxy s5 வந்துவிட்டது

மொபைல் சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சாம்சங், தனது நவீன கேலக்ஸி எஸ் 5 ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. ஆன்ட்ராய்டில் இயங்கும் இந்த போன் தோற்றத்தில் கேலக்ஸி எஸ் 4 போலவே இருக்கும். 5.1 இன்ச் சூப்பர் அமோலெட் திரை கொண்டது. 2.5 கிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர், 2 கி.பி ரேம் மற்றும் தண்ணீர் எதிர்ப்பு திறன் போன்றவை இதன் சிறப்பு அம்சங்கள். 16 ஜிபி மற்றும் 32 ஜிபி இடவசதி கொண்டதாக இருக்கும்.மேலும் மைக்ரோ மெமரி கார்டு மூலம் 64 ஜிபி வரை இடவசதியை நீட்டித்துக்கொள்ளலாம். ஆப்பிள் நிறுவனத்தின் 5எஸ் மாடலுக்கு போட்டியாக இது கருதப்படுகிறது. இதற்கு ஏற்ப, உடல் நலத்துடன் தொடர்புடைய ஹெல்த் 3.0 மற்றும் பயோமெட்ரிக் சென்சார் பட்டன் உள்ளிட்ட கூடுதல் வசதிகள் கேலக்ஸி எஸ்5ல் சேர்க்கப்பட்டுள்ளன.

சாம்சங் நிறுவனம் தனது முக்கிய போன் மாடல்களை வேர்ல்டு மொபைல் காங்கிரஸ் நடந்த பிறகுதான் வெளியிடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஸ்பெயினில் பார்சிலோனாவில் நடந்த வேர்ல்டு மொபைல் காங்கிரசில் வெளியிட்டுள்ளது. போட்டிகள் அதிகம் இருப்பதால் தனது எஸ்4 மாடலுக்கு மாற்றாக விரைவில் புதிய மாடல் கொண்டுவரவேண்டும் என்பதற்காக முன்னதாகவே வெளியிட்டு விட்டது. இதன் விலை விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த போன் வரும் ஏப்ரல் 11ம் தேதி முதல் இந்தியா உட்பட 150 நாடுகளில் விற்பனைக்கு வரும்.
Download As PDF

1 comment:

  1. Thanks for such a great writing,,really very interesting article..
    Book online bus ticket from Redbus

    ReplyDelete

back to top