Floating Facebook Widget

QR Code Imageஐ இனி கணினியில் ஸ்கேன் செய்யலாம்

QR Code பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கலாம். QR Code என்பது ஒரு ரகசிய குறியீடாகும். இந்த QR Code படத்தினுள் Texts, Links, Phone Numbers, Email Address, vcards ஆகியவைகளை மறைத்து ரகசியமாக மற்றவர்களுக்கு பகிரலாம். சமீபமாக இந்த QR கோடினை பல்வேறு துறைகளில் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் இதில் முக்கியமானவை விளம்பர துறைகள், இணையதளங்கள், மொபைல் மென்பொருள் நிறுவனங்கள் போன்றவைகளாகும்.

இதுவரை  QR கோடினை மொபைல்கள் மற்றும் இணையதளங்களின் உதவியுடன் ஸ்கேன் செய்து வந்தோம். இனி இந்த QR Code படத்தினை நாம் உபயோகிக்கும் விண்டோஸ் கணினியில் எப்படி ஸ்கேன் செய்வது என்று பார்க்கலாம். QR Code Desktop Reader என்ற இலவச மென்பொருள் இந்த வேலையை சுலபமாக செய்கிறது.

உபயோகிப்பது எப்படி:
முதலில் இந்த Code Two QR Reader தளத்தில் சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொண்டு மென்பொருளை திறந்து கொள்ளுங்கள்.
QR Code Image உங்கள் கணினியில் இருந்தால் From File என்பதை தேர்வு செய்து அந்த படத்தை தேர்வு செய்து கொள்ளவும்.
அல்லது QR Code Image ஏதேனும் இணையதளத்தில் இருந்தால் அந்த பக்கத்தை திறந்து கொண்டு இந்த மென்பொருளில் From Screen என்பதை கிளிக் செய்து அந்த QR Code Image ஐ தேர்வு செய்யவும்.

QR Code படத்தினை தேர்வு செய்தவுடன் அந்த படத்தில் மறைந்துள்ளதை இந்த மென்பொருள் காண்பிக்கும் அதனை உங்கள் கணினியில் சேமித்து கொள்ளும் வசதியும் இந்த மென்பொருளில் உள்ளது.


இனி QR Code image களை இந்த முறையில் சுலபமாக ஸ்கேன் செய்து கொள்ளலாம்.


Download As PDF

1 comment:

back to top