Floating Facebook Widget

வைரஸ்களால் மறைந்து போன கோப்புகளை USB மற்றும் Harddisk இல் இருந்து மீட்டெடுக்க

கணினிகளுக்கிடைய தரவுகளை பரிமாற்றம் செய்ய நாம் யுஎஸ்பி ட்ரைவினை அதிகம் பயன்படுத்துவோம். அவ்வாறு ஒரு கணினியில் இருந்து கோப்புகளை வேறொரு கணினிக்கு மாற்றம் செய்யும் போது யுஎஸ்பி ட்ரைவில் உள்ள கோப்பறைகள் யாவும் ஸ்டார்கட் கோப்பாக மாறி இருக்கும். ஆனால் நம்முடைய கோப்புகள் கோப்புகள் யாவும் அந்த யுஎஸ்பி பெண்ட்ரைவில் இருக்கும். ஆனால் அதனை திறந்தால் ஸ்டார்கட்டாக மட்டுமே இருக்கும். இது வைரஸ் பாதிப்பால் ஏற்படும். இந்த ஸ்டார்கட் கோப்பினை திறந்தால் நம்முடைய கோப்புகள் இருக்கும். ஆனால் அவ்வாறு செய்யும் போது நம்முடைய கணினிக்கும் அந்த ஸ்டார்கட் வைரஸ் வந்துவிடும். இந்த ஸ்டார்ட்கட் வைரஸால் நம் கணினிக்கு எந்த வித பாதிப்பும் வராமலும் , கோப்புகளுக்கு எந்த வித சேதாரம் இல்லாமலும் மீட்டெடுக்க முடியும். 

இதனை நாம் எந்த வித மென்பொருள் துணையும் இன்றி விண்டோஸ் இயங்குதளத்தின் உதவியுடன் செய்ய முடியும்.




ஸ்டார்கட் வைரஸ் பாதிக்கப்பட்ட பின் இது போல் ட்ரைவுகள் காட்சியளிக்கும்.  பாதிக்கப்பட்ட யுஎஸ்பி ட்ரைவினை கணினியில் பொறுத்திவிட்டு, பின் மைகம்ப்யூட்டரை ஒப்பன் செய்து எந்த ட்ரைவ் என குறித்துவைத்துக்கொள்ளவும். 

பின் கமான்ட் பிராம்டை ஒப்பன் செய்யவும். விண்டோஸ்கீ மற்றும் R பொத்தான்களை ஒரு சேர அழுத்தவும். தோன்றும் விண்டோவில் CMD என்று தட்டச்சு OK பொத்தானை அழுத்தவும். 


பின் தோன்றும் விண்டோவில் cd\ என்று உள்ளிடவும்.

அடுத்து எந்த ட்ரைவோ அந்த ட்ரைவினை உள்ளிட்டு என்டர் பொத்தானை அழுத்தவும். நான் E: என்று குறிப்பிட்டுள்ளேன். எனவே e: என்று உள்ளிட்டு என்டர் பொத்தானை அழுத்தவும். உங்களுடைய ட்ரைவ் மாறுபடும்.

அடுத்து dir/ah என்று உள்ளிட்டு பின் என்டர் பொத்தானை அழுத்தவும். தற்போது அந்த ட்ரைவில் உள்ள கோப்புகள் பட்டியலிடப்படும்.

அடுத்து attrib *. -h -s /s /d என்று உள்ளிட்டு பின் என்டர் பொத்தானை அழுத்தவும். என்டர் பொத்தானை அழுத்தியவுடன் கோப்புகளை தனியே பிரிக்கும் வேலை ஆரம்பம் ஆகும். 

இறுதியாக exit என்று உள்ளிட்டு பின் என்டர் பொத்தானை அழுத்தவும். தற்போது காமான்ட் பிராம்ப்ட் மூடப்படும்.

இப்போது உங்களுடைய யுஎஸ்பி ட்ரைவினை திறந்து பார்க்கவும். அப்போது உங்களுடைய கோப்புகள் அந்த ஸ்டார்கட் கோப்பு வைரஸ்களிடம் இருந்து தனியே பிரிக்கப்பட்டிருக்கும். அதனை நீங்கள் எடுத்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இந்த முறையானது ட்ரைவில் உள்ள அனைத்து கோப்புகளையும் தனியே பிரித்தெடுக்க முடியும்.இதே முறையை பயன்படுத்தி குறிப்பிட்ட ஒரு கோப்பினை மட்டும் பிரித்தெடுக்க முடியும். அதற்கு attrib கமெண்ட் உள்ளிடும் போது கோப்பின் பெயரையும் சேர்த்து உள்ளிட்டால் போதுமானது. tcinfo.psd என்னும் போட்டோசாப் பைலை மட்டும் ட்ரைவில் இருந்து தனியே மீட்டெடுக்க வேண்டுமெனில்  attrib tcinfo.psd -r -a -s -h என்று உள்ளிடவும். இப்போது நீங்கள் குறிப்பிட்ட கோப்பு ட்ரைவில் இருக்கும் பட்சத்தில் கோப்பானது மீட்டெடுக்கப்படும்.
Download As PDF

0 comments:

back to top