Floating Facebook Widget

Samsung galaxy s5 வந்துவிட்டது

மொபைல் சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சாம்சங், தனது நவீன கேலக்ஸி எஸ் 5 ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. ஆன்ட்ராய்டில் இயங்கும் இந்த போன் தோற்றத்தில் கேலக்ஸி எஸ் 4 போலவே இருக்கும். 5.1 இன்ச் சூப்பர் அமோலெட் திரை கொண்டது. 2.5 கிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர், 2 கி.பி ரேம் மற்றும் தண்ணீர் எதிர்ப்பு திறன் போன்றவை இதன் சிறப்பு அம்சங்கள். 16 ஜிபி மற்றும் 32 ஜிபி இடவசதி கொண்டதாக இருக்கும்.மேலும் மைக்ரோ மெமரி கார்டு மூலம் 64 ஜிபி வரை இடவசதியை நீட்டித்துக்கொள்ளலாம். ஆப்பிள் நிறுவனத்தின் 5எஸ் மாடலுக்கு போட்டியாக இது கருதப்படுகிறது. இதற்கு ஏற்ப, உடல் நலத்துடன் தொடர்புடைய ஹெல்த் 3.0 மற்றும் பயோமெட்ரிக் சென்சார் பட்டன் உள்ளிட்ட கூடுதல் வசதிகள் கேலக்ஸி எஸ்5ல் சேர்க்கப்பட்டுள்ளன.

சாம்சங் நிறுவனம் தனது முக்கிய போன் மாடல்களை வேர்ல்டு மொபைல் காங்கிரஸ் நடந்த பிறகுதான் வெளியிடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஸ்பெயினில் பார்சிலோனாவில் நடந்த வேர்ல்டு மொபைல் காங்கிரசில் வெளியிட்டுள்ளது. போட்டிகள் அதிகம் இருப்பதால் தனது எஸ்4 மாடலுக்கு மாற்றாக விரைவில் புதிய மாடல் கொண்டுவரவேண்டும் என்பதற்காக முன்னதாகவே வெளியிட்டு விட்டது. இதன் விலை விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த போன் வரும் ஏப்ரல் 11ம் தேதி முதல் இந்தியா உட்பட 150 நாடுகளில் விற்பனைக்கு வரும்.
Download As PDF

1 comments:

Facebook தளத்திற்கு 2017ஆம் ஆண்டு மூடுவிழா ?

உலகெங்கும் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் சமுக வலைத்தளமான பேஸ்புக் மீதான மோகம் 2017ஆம் ஆண்டுக்குள் வீழ்ந்துவிடும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. முகநூல் பயனர்கள் நாள்தோறும் வளர்ந்து வருகிறார்கள்.

நமது எண்ணங்களை பகிரவும், நண்பர்களைத் தொடர்பு கொள்ளவும் இந்தப் பயன்பாடு துணை புரிகிறது. இதன் மீதான மோகமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

பேஸ்புக்கில் செலவழிக்கும் நேரமும் அதிகரித்து வருகிறது.
ஆனால் 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் மட்டும் 80 சதவீத பயனர்களை பேஸ்புக் இழக்கும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆராய்ச்சியை அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.

ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த மைஸ்பேஸ் வலைத்தளம், 2008ஆம் ஆண்டில் அதிக அளவிலான பயனர்களை வைத்திருந்தது. ஆனால் 2011ஆம் ஆண்டில் அந்த நிறுவனம் மூடப்பட்டு 35 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.

அதே போன்ற நிலை பேஸ்புக் வலைத்தளத்துக்கும் ஏற்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.பொறுத்திருந்து பார்போம் .
Download As PDF

0 comments:

IRCTC தளத்தில் வேகமாக Ticket Booking செய்ய

உலகிலேயே மிகக் கடினமான விஷயம் எதுவென்று கேட்டால், இந்தியர்களின் பதில் IRCTC தளத்தில் ஒரே முறையில் டிக்கெட் புக் செய்வது என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு ஒரு கடினமான விஷயம் அது. அதில் டிக்கெட் புக் செய்யும் போது உங்களுக்கு உதவும் வகையில் ஒரு பயனுள்ள தகவல் ஒன்றை இன்று காண்போம்.

இந்த பதிவில் 9.30 க்கு லாக்-இன் செய்யுங்கள் என்று ஆரம்பித்து இதர விசயங்களை எல்லாம் சொல்லப் போவதில்லை. மாறாக ஒரே ஒரு ட்ரிக் மட்டும் தான் சொல்லப் போகிறேன்.
லாக் இன் செய்து, ரயிலை கண்டுபிடித்து புக் செய்யும் பக்கத்தில் தான் நமக்கு ஆரம்பிக்கும் பிரச்சினை, ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு புக் செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொருவரின் பெயரையும் கொடுத்து நாம் அவர்களின் வயது, பாலினம் என்று முடிப்பதற்குள் டிக்கெட்டுகள் முடிந்து விடும் வாய்ப்பு அதிகம்.

அதிலும் Payment பக்கத்தில் ஏதேனும் பிரச்சினை வந்து விட்டால் இன்னொரு முறை உங்களால் இந்த தகவலை வேகமாக நிரப்புவதற்குள் ரயில் அநேகமாக கிளம்பி இருக்கும். இதை தவிர்த்து புக் செய்யப்போகும் ஆறு பேருக்கும் ஒரே நொடியில் தகவல்களை நிரப்ப முடிந்தால், எப்படி இருக்கும்.
இந்த வசதியை இந்தியாவில் பிரபல தொழில்நுட்ப பதிவர் அமித் அகர்வால் கண்டுபிடித்துள்ளார். முதலில் Magic Autofill  என்ற பக்கத்திற்கு செல்லுங்கள், இதை எங்கோ பார்த்தது போல உள்ளது என்று நினைக்கிறீர்களா, இது IRCTC தளத்தில் பயணிகள் தகவல் கொடுக்கும் பக்கத்தின் மாதிரி தான்.

இதில் பயணிகள் குறித்த தகவல்களை முதலில் நிரப்பி விடுங்கள். பின்னர் I’m Feeling Lucky என்பதை கிளிக் செய்து அதற்கடுத்து “Magic Autofill” என்பதை உங்கள் உலவியில் Drag செய்து Bookmark Toolbar பகுதியில் விடவும்.




கவனிக்க நீங்கள் இந்த பக்கத்தை Bookmark செய்யகூடாது. Firefox மற்றும் Chrome உலவியில் Bookmark Toolbar Enable செய்து இருக்க வேண்டும், அப்போது தான் இது அங்கே Add ஆகும்.
                       இப்போது IRCTC தளத்தில் பயணிகள் தகவலை நிரப்பும் போது இந்த Magic Fill என்பதை அழுத்தினால், அது ஒரே நொடியில் அனைவருக்கும் தகவல்களை நிரப்பி விடும்.
                       இது கூடுதலாக உள்ள Food, ID Card No, ID Card Type என்பதை குறித்த கவலை வேண்டாம், நீங்கள் புக் செய்யும் போது அது கேட்கப்படவில்லை என்றாலும் பிரச்சினை இல்லை.

இந்த Magic Autofill ஒரு Java Script ஆகும் நீங்கள் நிரப்பும் தகவல்கள் உங்கள் உலவியில் சேமிக்கப்படும், நீங்கள் கிளிக் செய்யும் போது IRCTC தளத்தில் உள்ள கோடிங் உடன் மேட்ச் ஆகி தகவல்கள் ஒரே நொடியில் நிரப்பப்பட்டு விடும்.
Download As PDF

1 comments:

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா ? ஆன்லைன் மூலம் கண்டறிய !

உங்கள் பெயர் வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளதா என்று சரி பார்க்க வேண்டுமெனில் ஒரு நாள் விடுப்பு கண்டிப்பாக எடுக்க வேண்டும்.
அல்லது நீங்கள் வெளிமாநிலம், வெளிநாடுகளில் வேலை செய்பவர் என்றால் நீங்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் அல்லது உங்கள் குடும்பத்தினரிடம் சரி பார்க்க சொல்ல வேண்டும்.

                     இந்த பிரச்சணயை போக்க தமிழ் நாடு தேர்தல் துறை இணைய தளம் மூலமாக உஙக்ளின் மாவட்டம், சட்டமன்ற தொகுதியை தேர்வு செய்து உங்கள் பெயர் உங்கள் ஊரில் அல்லது தெருவில் உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம்.
                        அது மட்டும் இல்லாமல் உங்கள் பெயரை தேட வசதியாக வாக்காளர் அடையாள அட்டை எண், தெரு அல்லது வாக்குச்சாவடியின் பெயர் மூலமாகவும் தேடலாம்.தமிழில் தேடும் வசதி உள்ளது. ''



சரிபார்க்க http://www.elections.tn.gov.in/eroll/
Download As PDF

0 comments:

avast internet security 2014 மென்பொருள் 1000 நாள் validityயுடன்

Avast Internet Security 2014 புதிய வெர்சனில் கணினியின் வைரஸ், ஸ்பாம், ஸ்பைவேர் போன்ற அனைத்தையும் தேடி அழிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக அவாஸ்ட் தளம் அறிவித்துள்ளது. ரியல் டைம் ஸ்கேன் மிக சிறப்பாக இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கே 1000 days வேலிடிட்டி கொண்ட லைசன்ஸ்  இணைக்கப்பட்டுள்ளது. 



                                                              Download it here
Download As PDF

1 comments:

தமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்

இம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்கள் (அபஹாரம்), கிரகங்களின் அமைப்புகளின் ஆய்வு, ஜோதிடத்தில் கிரஹங்களின் சிறப்பான பிணைப்பு ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும்.



இந்த மென்பொருளானது நடப்பு தசா மற்றும் அபஹாராவை அடிப்படையாக வைத்து விரிவான கணிப்புகள் வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல் பிறந்த நட்சத்திரத்தை கணக்கிடுதல், ஒருங்கிணைந்த நட்சத்திரங்களின் தரத்தின் முழுப்பட்டியல் ஆகியவற்றையும் வழங்குகிறது.


சிறப்பம்சங்கள்: 

  • பஞ்சாங்கக் கணிப்புகள்
  • பாவ கணிப்புகள்
  • தசா/அபஹாரா தாக்க அடிப்படை  கணிப்பு
  • கிரகங்களின் சிறப்பான பிணைப்பு

கணக்கீடு: 

  • இலவசமாக ஜோதிடம் தயாரிக்க முடியும்.
  • அயனாம்ச தெரிவுகள்
  • பஞ்சாங்க கணிப்புகள்
  • பாவ கணிப்புகள்

கணிப்புகள்: 

  • பிறந்த நட்சத்திரம் மற்றும் அதனுடன் ஒருங்கிணைந்த நட்சத்திரங்களின் தரத்தை வைத்து கணக்கிடப்படுகிறது.
  • விம்ஷோத்தாரி தசா காலங்கள்
  • சுதர்ஷன சக்கர அட்டவணை
  • கிரகங்களின் அமைப்புகளின் ஆய்வு



இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட இந்த ஜோதிட மென்பொருளானது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, மலையாளம், பெங்காலி ஆகிய மொழிகளிலும் பயன்டுத்த முடியும். பெரும்பாலான இந்திய மொழிகளில் இம்மென்பொருளைப் பயன்படுத்த முடிவதால் மற்ற மென்பொருட்களைக் காட்டிலும் இது ஒரு முழுமையான ஜோதிடம் மென்பொருள் என்பதில் சந்தேகமில்லை.

                                                                  download it here
Download As PDF

1 comments:

back to top