Floating Facebook Widget

ஆன்லைனில் ஈசியாக பான் கார்ட் பெற வேண்டுமா?

2 comments
வெவ்வேறு தேவைகளுக்கான, ஒரு அடையாள ஆவணமாக இந்தியர்கள் நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டையைப் பயன்படுத்துகின்றனர். வேலைசெய்யாத மற்றும் வரி தாக்கல் செய்யாத பலர், அடையாள ஆவண தேவைக்காக மட்டுமே இந்த பான் கார்டை வைத்துள்ளனர். இந்த கார்டின் தேவை சில வருடங்களாக அதிகரித்திருப்பதால், ஏராளமானோர் இதைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கின்றனர். இதன் காரணமாக, வருமான வரித் துறை பான் கார்ட் பெறுவதற்கான செயல்முறையை எளிமைபடுத்த முயன்று வருகிறது. ஆரம்ப நாட்களில் இடைத் தரகர்கள், குறிப்பாக சாட்டட் அக்கெளன்டன்டுகள் மூலமே இந்த பான் கார்டை பெறமுடிந்தது, ஆனால் இன்று இலகுவாக ஆன்லைன் மூலம் பான் கார்ட் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணபத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தெளிவான அறிவுறுத்தல்கள் மற்றும் வழிமுறைகள் கொடுக்கப்படுவதால், இது மிக எளிமையான மற்றும் இலகுவான செயல்முறையாகும். ஆன்லைன் மூலம் பான் கார்ட் விண்ணப்பம் செய்வதற்கான வழிமுறைகள் பின்வருமாறு;


இணையத்தளம் வருமான வரி பான் சேவைப் பிரிவின் பின்வரும் இணையத்தள முகரிக்குச் செல்லவும் - https://tin.tin.nsdl.com/pan/

பான் விண்ணப்பப் படிவம்

பான் விண்ணப்பப் படிவம் இது வருமான வரி பான் சேவைப் பிரிவு இணையத்தளத்தின் முதல் பக்கமாகும், இதில் புதிய பான் விண்ணப்பப் படிவம், தகவல் அறிதல், ட்ராக்கிங்க் ஸ்டேடஸ், பான் கார்ட் ரீ-பிரிண்ட் செய்தல் மற்றும் பான் கார்ட் விபரங்கள் மாற்றம் செய்தல் அல்லது திருத்தங்கள் செய்தல் ஆகிய தேர்வுகள் உள்ளன. விண்ணப்பதாரர் தனக்குப் பொருத்தமான ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும்.

படிவம் 49ஏ 

புதிதாக பான் கார்ட் விண்ணப்பம் செய்வதற்கு படிவம் 49ஏ ஐ பயன்படுத்த வேண்டும். https://tin.tin.nsdl.com/pan2/servlet/NewPanApp என்ற இணையத்தள முகவரியில், படிவம் 49ஏ ஐ ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்ய முடியும். கேட்கப்பட்டிருக்கும் விபரங்களை பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்கவும். ஆன்லைன் மூலம் இந்த படிவம் சரியான முறையில் சமர்ப்பிக்கப் பட்ட பின்னர், இதற்கான அக்னாலேஜ்மென்ட், டிஸ்ப்ளே செய்யப்படும். இதில் 15 இலக்க அக்னாலேஜ்மென்ட் நம்பர் இருக்கும். அடுத்தடுத்த செயல்முறைக்காக இந்த அக்னாலேஜ்மென்டைப் பிரிண்ட் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆவணங்களை இணைத்தல் 

இந்த அக்னாலேஜ்மென்ட் படிவம் வருமான வரித்துறைக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும். இதை அனுப்புவதற்கு முன்னர் இதனுடன் முகவரிச் சான்று மற்றும் அடையாள சான்று ஆகிய முக்கிய ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். இந்த ஆவணங்களில் உங்கள் பெயர் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதோ, அதே போலவே பான் விண்ணப்ப படிவத்திலும் இருக்க வேண்டும். ஆகவே படிவம் 49ஏ ஐ பூர்த்தி செய்யும் போது மிக கவனமாக இருக்கவும்.

புகைப்படம்

சமீபத்தில் எடுத்த இரண்டு கலர் புகைப்படங்களை, இந்த அக்னாலேஜ்மென்ட் படிவத்தில் அதற்கென கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஒட்ட வேண்டும். அதே போல் குறிக்கப்பட்ட இடங்களில் கையெழுத்திட வேண்டும். நீங்கள் ஒட்டும் புகைப்படமே உங்கள் கார்டில் பிர்ண்ட் செய்யப்படுவதால், இந்த புகைபடங்கள் அண்மையில் எடுத்ததாகவும். தெளிவானதாகவும் இருக்க வேண்டும்.

இதற்கான கட்டணம் வெறும் ரூ.96

தான் உங்கள் தொடர்பு முகவரி இந்தியாவுக்குள் இருந்தால். நீங்கள் பான் விண்ணப்பத்திற்காக ரூ.96/- கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை பின்வரும் முறைகள் மூலம் செலுத்தலாம் - காசோலை, டிமான்ட் ட்ராப்ட், இன்டர்நெட் பாங்கிங், கிரடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட். தொடர்பு முகவரி வெளிநாட்டு முகவரியாக இருந்தால், ரூ.962/- கட்டணமாக செலுத்த வேண்டும் மற்றும் இந்த தொகை டிமான்ட் ட்ராப்ட் மூலம் செலுத்தபட வேண்டும். ஒரு வேளை, இன்டர்நெட் பாங்கிங், கிரடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் மூலம் செலுத்த விரும்பினால், விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யப்படும் போதே செலுத்த வேண்டும், இதற்கு பேமென்ட் அக்னாலேஜ்மென்ட் கொடுக்கப்படும். இதை பிரிண்ட் செய்து அக்னாலேஜ்மென்ட் படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

15 நாட்கள் மட்டுமே

ஆகவே அக்னாலேஜ்மென்ட் படிவத்துடன் - புகைப்படங்கள், முகவரிச் சான்று, அடையாளச் சான்று மற்றும் கட்டணதொகை/ கட்டணம் செலுத்தப்பட்டதற்கான சான்று ஆகியவை இணைந்திருக்க வேண்டும். இது விண்ணபித்த தேதியிலிருந்து 15 நாட்களுக்குள், பூனாவிலுள்ள என்எஸ்டிஎல் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். இதை அனுப்பும் போது அஞ்சல் உறையின் மீது ‘அப்ளிகேஷன் ஃபார் பான்- அக்னாலேஜ்மென்ட் நம்பர்' என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். கட்டணத் தொகை கிடைத்த பின்னர், என்எஸ்டிஎல், விண்ணப்பத்தை ஃப்ராசஸ் செய்யும் அதாவது காசோலை அல்லது டிமாண்ட் ட்ராஃப் மூலம் கட்டணம் செலுத்தப்பட்டால், பேமென்ட் கிளியர் ஆகும் வரை காத்திருக்க வேண்டும்.

ஆப்ளிகேஷன் டிரக்கிங் 

அக்னாலேஜ்மென்ட் படிவத்தை அனுப்பிய பின்னர், ஆன்லைன் மூலம் உங்கள் விண்ணப்ப ஸ்டேடஸ் பற்றி தெரிந்து கொள்ள முடியும். கட்டணம் செலுத்தப்பட்ட விபரங்களையும் ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம். என்எஸ்டிஎல் முகவரிக்கு எழுதுவதன் மூலம் அல்லது 57575 என்ற நம்பருக்கு - என்எஸ்டிஎல்பான் - இடைவெளி - அக்னாலேஜ்மென்ட் நம்பர் டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமும் ட்ராக்கிங் செய்யும் வசதியை என்எஸ்டிஎல் வழங்குகிறது.

விபரங்களை மாற்றுதல் அல்லது திருத்தம் செய்தல் 

உங்களிடம் ஏற்கனவே உள்ள பான் கார்ட் விபரங்களை மாற்றுவதற்கு அல்லது திருத்தம் செய்வதற்கான செயல்முறை, புதிய பான் கார்ட் விண்ணப்பம் செய்யும் முறையை ஒத்தது. இதற்கு வருமான வரித்துறையின் பான் சேவைப் பிரிவு இணையத்தள முகப்பில் உள்ள "பான் விபர மாற்றங்கள் அல்லது திருத்தங்கள்" என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் பான் மாற்ற வேண்டுகோள் படிவத்தை பூர்த்தி செய்வதற்கு மேலே குறிப்பிட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றவும். இந்த பான் மாற்ற வேண்டுகோள் பிரிவிலும், தனிப்பட்ட வழிமுறைகள், அறிவுறுத்தல்கள் மற்றும் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை ஆகிய அனைத்தும் கொடுக்கபட்டிருக்கும்.

இனிமேல் ஈசியாக பான் கார்ட் பெறலாம் 

ஆகவே நீங்கள் இனிமேல் பான் கார்ட் பெறுவதற்கு வேறு ஒருவரை அல்லது உங்களுக்கு தெரிந்த ஒருவரை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. மேலே கூறப்பட்ட ஸ்டெப்புகளை பின்பற்றி பான் கார்டை இலகுவாக பெற்றுக்கொள்ளுங்கள். மேலே கூறப்பட்டுள்ள நடைமுறைகள் எளிதாக மற்றும் சுயமாக புரிந்து கொள்ளும் விதத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. போதிய அறிவுறுத்தல்கள், வழிமுறைகள் மற்றும் செய்ய வேண்டியவை, செய்ய கூடாவை ஆகிய அனைத்து விபரங்களும் பான் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் போது, இணையத்தளத்தில் உங்களுக்கு தெளிவாக கொடுக்கப்படும்.

Read More »

சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதல்களை இனி ஆன்லைன் மூலம் பெறலாம்

0 comments
சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதல்களை இனி ஆன்லைன் மூலம் பெறலாம்.தமிழ்நாடு இப்பொழுது "e-District" ஆகி விட்டது.இனிமேல் நீங்கள் வி.ஏ.ஒ , ஆர்.ஐ , தாசில்தார் இவர்களை நேரில் பார்க்காமல் ஆன்லைன் மூலம் சாதிச் சான்றிதல், இருப்பிடச் சான்றிதல்,வருமானச் சான்றிதல், No Graduate போன்றச் சான்றிதல்களை பெற முடியும்.




இணைய முகவரி: http://edistrict.tn.gov.in/ 

Read More »

மொபைல் நம்பர் தெரியாமல் மறைக்க

5 comments
 ஒரு மொபைல் நம்பரிலிருந்து  நண்பர்களின் மொபைல்களுக்கு அல்லது மற்றவர்களின் அலைப்பேசிக்கு அழைக்கும்பொழுது அந்த மொபைல் நம்பர் நண்பர்களுக்குத் தெரியாமல் மறைப்பதற்கு இப்போது டெக்னிக் (Mobile Number Hiding Technical) வந்துவிட்டது.

அதாவது நீங்கள் உங்கள் நண்பரின் மொபைல் போனுக்கு அழைக்கும்போது அவரின் மொபைல் போனில் உங்களுடைய மொபைல் நம்பர் தெரிவதற்குப் பதில் Private Number என்று மட்டும் வரும்.  உங்களுடைய மொபைல் நம்பர் அவருடைய செல்போனில் தெரியாது.


உங்களுடை மொபைல் நம்பர் 9865072896 எனில் அதனுடன் *67 என்ற எண்ணையும் உங்கள் மொபைல் எண்ணுடன் சேர்த்து டயல் செய்யுங்கள்.

இது ஒரு யுனிவர்சல் கோட். அதனால் உங்களது மொபைல் எண்  *67 9865072896 என்று டயல் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது எண்களுக்கிடையே இடைவெளி விடாது  இருக்க வேண்டும். அவ்வாறு இடைவெளி விடாமல் சரியாக உள்ளிட்டு டயல் செய்யும்போது உங்களுடைய எண் ஏற்றுக்கொள்ளப் படமாட்டார்கள்.

இவ்வாறு செய்யும்பொழுது உங்களுடைய எண் நீங்கள் அழைக்கும் நபருக்கு டிஸ்பிளே (Display) ஆகாது.  மீண்டும் உங்களுடைய எண் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் எனில் *82 என்ற எண்ணைச் சேர்த்து டயல் செய்தால் போதுமானது. பிறகு உங்களுடைய மொபைல் நம்பர் (Android Mobile Number) மீண்டும் பழையபடி மற்றவர்களின் மொபைல்களில் டிஸ்பிளே ஆகும்.

இதே முறையை இப்படியும் செய்யலாம்.

நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நெட்வொர்க்கின் கஸ்டமர் கேர்க்கு (Customer Care) போன் செய்து லைன் பிளாக் பிளாக் (line) வசதியை நீங்கள் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என சொன்னால் போதுமானது. அவர்கள் அந்த வசதியை உங்களுக்கு ஏற்படுத்தித் தருவார்கள்.

மீண்டும் இந்த வசதி உங்களுக்கு வேண்டாமென நினைத்தால் , மீண்டும் கஸ்டமர் கேருக்கு போன் செய்து அவர்களிடம் இந்த லைன் பிளாக் வசதி எனக்கு வேண்டாம் என நீங்கள் கூறி, அந்த வசதியை நீக்கிவிடலாம்.

முக்கிய குறிப்பு: 

இந்த வசதியின் மூலம் உங்களுடைய மொபைல் நம்பரானது மற்றவர்களின் மொபைல்களில் தோன்றால் பிரைவேட் நம்பர் (Private Number) என்று மட்டுமே தோன்றும்.. மற்றபடி நீங்கள் இந்த வசதியின் மூலம் பேசுவது யார்.. எந்த எண்ணிலிருந்து பேசுகிறார்கள்.. எங்கிருந்து பேசுகிறார்கள் என்பதையெல்லாம் மறைக்க முடியாது. எனவே இந்த வசதியைப் பயன்படுத்தி தவறான நடவடிக்கைகளில், தவறான வழிமுறைகளில் செல்ல நினைத்தால் நிச்சயம் சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொள்வீர்கள்.

பெரிய பெரிய நிறுவனம் அல்லது வியாபார நிமித்தமாக (Business Related Calls), உங்களுடைய எண் மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்று நினைப்பவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.

Read More »

உலகின் மிகப்பெரிய தொலைக்காட்சி LG 77 4k Ultra HD OLED

0 comments
உலகின் மிக பிரபலமான தொலைக்காட்சி நிறுவனம் LG. இந்நிறுவனம் தனது புதிய தொலைக்காட்சியை வெளியிட்டுள்ளது.

தொலைக்காட்சியின் பெயர்:  LG 77 4k Ultra HD OLED 



 LG 77 4k Ultra HD OLED ன் சிறப்பம்சங்கள்: 

  • 77 அங்குலம் உடையது.
  • Ultra High Definition தொழில்நுட்பம்
  • இதன் விலை சுமார் ரூபாய் 20000 டாலர் (உண்மையான விலை வெளியிடபடவில்லை)

தொலைக்காட்சியின் சிறப்பு:

எந்த திசையில் அமர்ந்து பார்த்தாலும் துல்லியமான படத்தை கொடுக்கக்கூடியது என்றும், தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்திருக்கும் போது காட்சிகள் கண்களுக்கு தூர இடைவெளி வித்தியாசமில்லாமல் ஒரே தூரத்தைக் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக LG நிறுவனம் அறிவித்துள்ளது.

எதிர்பார்க்கப்படும் விலை: 

இதற்கு முன்பே LG நிறுவனம் 55 அங்குல திரை அகலம் கொண்ட தொலைக்காட்சியை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ரூபாய் 15 ஆயிரம் டாலர்.  எனவே கூடுதலான அகலம் கொண்டிருக்கும் இந்த தொலைக்காட்சியின் விலை சற்றேறக்குறைய 20000$ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More »

சோனியின் புதிய ஸ்மார்ட் கேமரா--மொபைல் போனுடன் சேர்த்து பயன்படுத்தலாம்...!

0 comments
சோனி நிறுவனம் தனது புதிய கேமராக்களை ( Qx10 மற்றும் Qx100) நேற்று அறிமுகப்படுத்தியது.   இந்த கேமிராக்கள் ஸ்மார்ட் போனுடன் இணைந்து தொழிற்படும் விதத்தில்  அமைக்கப்பட்டுள்ளது .

இவை பார்ப்பதற்கு மிகவும் மெல்லியதாகவும், ஸ்மார்ட்போனில் வயர்லஸ் முறையில் இணைத்து துல்லியமான காட்சிகளைப் பார்த்து (real-time viewfinder) படமெடுக்கும்  விதத்திலும் அமைந்துள்ளது.




இந்த QX கேமிரா தொகுப்பானது சோனி நிறுவனத்தின் PlayMemories Mobile அப்ளிகேஷனில் இயங்ககூடியகூடியதாக உள்ளது. அதனுடன் இது ஸ்மார்ட் போன் டிஸ்பிளே மூலம் ஒரு Image Shooter ஆகவும் பயன்படுகிறது. இதன்மூலம் வீடியோ ரெக்கார்டிங், போட்டோ adjustment settings, shooting mode, zoom, auto focus ஆகிய வேலைகளையும் செய்யலாம்.

இப்புதிய Qx10, Qx100 கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட போட்டோக்களானது ஸ்மார்ட் போன் அல்லது Sony-QX-camera வில் ஸ்டோர் செய்யப்படுகிறது. எடுக்கப்பட்ட போட்டோக்களை சமூக வலைத்தளங்களிலும் உடனடியாக பகிரும் வசதியும் இதில் உள்ளன.

ஸ்மார்ட் போனை இந்த Qx unit பின்புறத்தில் இணைத்தும் பயன்படுத்தலாம். தனியாக ஒரு ஸ்டேன்ட் அலோன் கேமராவாக (Stand Alone) தூரத்திலிப்பவைகளையும் படம் பிடிக்க முடியும்.

இந்த இரண்டு கேமராக்களிலும் shutter release, memory card, battery ஆகியனவும் உள்ளது.

Sony Qx100 கேமராவில்  உள்ள சிறப்பம்சங்கள்:


1. one-inch 20.2 megapixel Exmor RCMOS sensor
2. Cyber-shot RX100 II camera
3. ultra-low-noise images
4. Carl Zeiss Vario-Sonnar T lens  (3.6x optical zoom)
5. Manual focus and zoom adjustments

QX10 கேமராவின் சிறப்பம்சங்கள்: 

1. 18.2MP Exmor RCMOS sensor 
2. Sony G Lens with a 10x optical zoom
3. supports image stabilization
4. shooting modes (Program Auto, Intelligent Auto and Superior Auto)

Read More »

PenDriveஐ பாதுகாக்க Default Safe Removal வசதி

0 comments
Portable Device என்று சொல்லப்படும் பென்டிரைவ் போன்றவைகளை யு.எஸ்.பி  போர்ட்டில் செருகிப் பயன்படுத்துவீர்கள்.

சிலநேரங்களில் வேலை முடிந்ததும் Pendrive-வை USB Port லிருந்து எடுக்கும்பொழுது Safe Removal கொடுக்காமலேயே அப்படியே அதை உருவி எடுத்துவிடுவோம்.


சிலருக்கு Safe Removal கொடுக்காவிட்டால் என்ன நிகழும் என்று தெரிந்திருந்தும், அப்படிச் செய்யாமல் உடனடியாக USB Port லிருந்து Pendrive வை நீக்கிவிடுவார்கள்.

காரணம் வேலை செய்து முடித்துவிட்டு, உடனடியாக அதை எடுத்துவிட வேண்டும் என்ற எண்ணம்தான் காரணம்.

சரி.. இப்படி நீங்களாகவே Safe Remove கொடுக்காமல்,
தானாகவே Safe Remove கொடுப்பது எப்படி?

என்பதைப் பார்ப்போம்.



1.     உங்களுடைய கணினியில் பெட்டிரைவை செருகவும்.
2.     இப்போது mycomputer Icon மீது ரைட் கிளிக் செய்யவும்.
3.     தோன்றும் பெட்டியில் Manage என்பதைச் சொடுக்கவும்.
4.     தோன்றும் பெட்டியில் Device Manager என்பதில் கிளிக் செய்யவும்.
5.      கிளிக் செய்தவுடன் கணினியில் உள்ள அனைத்து டிவைஸ்களும்    அதில்        காட்சியளிக்கும்.
6.       தோன்றும் காட்சியில் Disk Drives என்பதில் டபுள் கிளிக் செய்யவும்.
7.       தோன்றும் கீழ்விரி பட்டியலில் உங்களுடைய பென்டிரைவின்    பெயரைத்        தேடி அதில் டபுள் கிளிக் செய்யவும்.
8.        இப்போது தோன்றும் விண்டோவில் இரண்டாவதாக உள்ள Polices  என்பதைக் கிளிக் செய்து,  Quick Removal (Default) என்பதைக் கிளிக் செய்து  தேர்வு செய்து வெளியேறுங்கள்.

இனி, நீங்கள் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை USB port-லிருந்து நீக்கும்பொழுதும் Safe Remove கொடுக்கத் தேவையில்லை. உங்களுடைய பென்டிரைவும் எந்த பாதிப்பும் அடையாமல் பாதுகாப்புடன் இருக்கும்.

Read More »

APPLE IPHONE 5S அடுத்த மாதம் வெளியாக உள்ளது

0 comments
ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த பெருமைக்குரிய மொபைல் போனாகிய ஐபோன் 5 எஸ், வரும் செப்டம்பர் 10ல் வெளியிடப்படக் கூடும் என்று தெரிய வந்துள்ளது.



இத்துடன், குறைவான விலையிடப்பட்ட ஐபோன் மாடல் ஒன்றும் வெளியாகும் எனத் தெரிகிறது. இது ஐபோன் 5 சி என அழைக்கப்படலாம்.

ஐபோன் 5 எஸ் மாடலில், அதன் ஹோம் பட்டனில், கை விரல் ரேகைக்கான ஸ்கேனர் அமைக்கப்படலாம். இதன் கேமரா விநாடிக்கு 120 பிரேம்களைப் பதியும் வேகம் கொண்டதாக இருக்கும்.

தற்போதைய ஐபோன் கேமராக்கள், விநாடிக்கு 30 பிரேம் பதியும் திறன் கொண்டுள்ளன. இதனால், புதிய போனைக் கொண்டு ஸ்லோ மோஷன் திரைப்படங்களைக் கூடப் பதியலாம்.

ஆப்பிள் ஐபோன் சி, விலை மலிவான பிளாஸ்டிக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனாலேயே இதன் விலையைக் குறைக்க முடிகிறது.

தற்போது விலை குறைந்த மற்றும் மத்திய நிலையில் விலையிட்டுள்ள, ஸ்மார்ட் போன்களே, மொபைல் சந்தையில் கோலோச்சிக் கொண்டுள்ளன.

இதனாலேயே, குறைவான விலையில் மாடல் ஒன்றைக் கொண்டு வருவதில் ஆப்பிள் குறியாய் உள்ளது.

இந்த விலை குறைவான மாடல் மூலம், மொபைல் சந்தையில், தன்னுடைய ஸ்மார்ட் போனைப் பெரும்பாலான மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்க்கிறது.

இன்னும் ஒரு மாத காலம் இருப்பதால், நாம் காத்திருந்து இந்த இரண்டு மாடல்களும் என்ன தகவல்களைக் கொண்டு வர இருக்கின்றன என்று பார்க்கலாம்.


Read More »

கணினியில் ஏற்படும் பிரச்சனைகளும் , தீர்வுகளும்

0 comments
நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் கணினிகளில் அடிக்கடி சில  error செய்திகளை காட்டும்.அந்த error களை எப்படி சரிசெய்வது? என்ன பிரச்சனை? உங்கள் கணினியை கடைக்கு எடுத்து போகாமல் நீங்களே முயற்சி செய்து பாருங்கள்.


1.No Fixed Disk present:
காரணம்:ஹார்ட்ரைவ் சரியாக இணைக்கவில்லை என்றால் இவ்வாறு பிழைச்செய்தி வரும்.ஹார்ட்ரைவின் மின் இணைப்பானை சரிபார்க்கவும்.அனைத்து கேபிளிலும் சரியான மின்னழுத்தம் உள்ளதா என்று சரிபார்க்கவும்.பிறகு இணைப்பு கேபிளை சரியாக இணைக்கவும்.

2.Error Reading Drive C"
ஹார்ட்ரைவின் இணைப்புகள் சரியாகவுள்ளதா என்று சரிபார்க்கவும்.இணைப்புக் கேபிளில் பழுதிருந்தால் அதை மாற்றிடவும்.மீண்டும் பிழை செய்திவந்தால் ஆண்டிவைரஸ் நிரலை பயன்படுத்தி வைரஸ் இருந்தால் அதை நீக்கிவிடவும்.பிறகும் பிழை செய்தி வந்தால் "Scan disk" -ஐ இயக்கி செக்டார்கள் ஏதும் பழுதாகியுள்ளதா என்று பார்க்கவும்.செக்டார்கள் பழுதாகி இருந்தால் ஹார்ட்ரைவை மாற்றவும்.

3.Track 0 not Found
டிரைவின் ட்ராக் "0" கெட்டிருந்தால் இவ்வாறு பிழைச்செய்தி வரும். டிரைவின் கோப்பு விவர அட்டவணை(FAT) இங்கு தான் பதிந்திருக்கும்.இந்த அட்டவணையைக் கொண்டுதான் டிரைவில் பதிந்திருக்கும் அனைத்துத் தகவலையும் எழுத/படிக்க முடியும்.பூட் பிளாப்பியை பயன்படுத்தி
ஹார்ட்டிரைவை பார்ட்டீசியன் பன்னவும்.மீண்டும் இதே பிழை செய்தி வந்தால் ஹார்ட்டிரைவை மாற்றவும்.

4.கணினியை "ஆன்" செய்தும் திரையில் டிஸ்பிளே வரவில்லை.

  • .மானிட்டரின் மின் கேபிள் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும்.
  • .மானிட்டரின் பொத்தான் "ஆன்" ஆகியுள்ளதா என்று பார்க்கவும்.
  • .மானிட்டரின் இணைப்பு கேபிளை(interface cable) சரிபார்க்கவும்.
  • .மானிட்டரின் Brightness control-ஐச் சரிபார்க்கவும்.
  • .வி.ஜி.ஏ கார்டைச் சரிபார்க்கவும்.
  • .நினைவகத்தை சரிபார்க்கவும்.

5.கணினியை "ஆன்" செய்தவுடன் ஒரு பெரிய பீப் ஒலி மற்றும் இரண்டு சிறிய பீப் ஒலி வந்து டிஸ்பிளே வரவில்லை என்றால்:

  • .வி.ஜி.ஏ(VGA) கார்டைச் சரிபார்க்கவும்.
  • .வேறு வி.ஜி.ஏ கார்டை மாற்றவும்.


6.கணினியை "ஆன்" செய்தவுடன் "No keyboard is connected " அல்லது "Keyboard not present" என்ற பிழைச் செய்தி வருகிறது.
  • .விசைப்பலகை சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும்.
  • .விசைப்பலகையின் கேபிளை சரிபார்க்கவும்.எங்கேனும் துண்டிக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.
  • .நன்றாக இயங்கும் வேறு ஒரு விசைப்பலகையை இணைக்கவும்.அதன்பிறகும் பிழை செய்தி வந்தால் மதர்போர்டின் விசைப்பலகை இணைப்பானில் பிரச்சனை இருக்கலாம்.


7.DVD -ல் உள்ள தட்டை(tray) பகுதி வெளிவரவில்லை 

  • .DVD மூலம் ஏதேனும் படங்களை இயக்கி கொண்டிருக்கும் போது வெளிவராது.எனவே DVD மூலம் திறந்திருக்கும் மென்பொருள்களை மூடி விட்டு முயற்சிக்கவும்.இல்லையென்றால் கனினியை ரீஸ்டார்ட் செய்தபின் முயற்சிக்கவும்.
  • .DVD டிரைவின் மின் இணைப்பியை சரிபார்க்கவும்.அப்படியும் திறக்கவில்லையா டிவிடி தட்டை இயக்கும் மோட்டார் பழுந்தடைந்திருக்கலாம்.
  • .டிவிடி டிரைவின் முன் புறம் உள்ள சிறுதுளையில் நீண்ட மெல்லிய கம்பியை நுழைத்தால் டிவிடி தட்டைப் பகுதி வெளியே வரும்.


8.கணினியை "ஆன்" செய்தவுடன் தொடர்ச்சியாக பீப் ஒலி வந்து டிஸ்பிளே வரவில்லை என்றால்..

  • .நினைவகத்தை (RAM) சரியாக இணைக்கவும்
  • .நினைவகத்தை மாற்றவும்.

9.Bad command are file name..

நீங்கள் கொடுத்த டாஸ்(DOS) கட்டளை சரியான கட்டளைதானா என்று சரிபார்க்கவும்.கட்டளையில் ஏதேனும் சிறு தவறு நேர்ந்திருந்தாலும் இவ்வாறு பிழை செய்தி வரும்.

10.Insufficient Disk Space

டிஸ்க்-ல் தகவலை பதிக்க போதிய இடம் இல்லையெனில் இவ்வாறு பிழைச்செய்தி வரும்.தேவையில்லாத கோப்புகளை அழித்துவிட்டால் இடம் கிடைக்கும்.


Read More »

கணினிக்கு தேவையான டிரைவர்களை நிறுவ மற்றும் அப்டேட் செய்ய இலவச மென்பொருள்

0 comments

உங்கள் கணிணியில் ஒலி வரவில்லையா ,சில கேம்களை விளையாட முடியவில்லையா இவைகளுக்கு காரணம் தேவையான கணிணி டிரைவர்கள்(Drivers) உங்கள் கணிணியில் இல்லாமல் இருக்கலாம் அல்லது பழுதடைந்து போயிருக்கலாம்.புதிதாக விண்டோஸ் நிறுவிய பின்னர் சில நேரங்களில் டிரைவர்கள் இல்லாமல் போகலாம். இவற்றை உங்கள் கணிணிக்கு ஏற்ற டிரைவர்களை கண்டு பிடித்து நிறுவுவது கடினம். slimdriver என்ற இந்த மென்பொருள் இந்த வேலையை எளிதாக்குகிறது.



எனது கணிணியில் ஒரு கேம் விளையாட முடியவில்லை பல நாளாக ஏதோ display டிரைவர் இல்லை என வந்தது.எந்த டிரைவர் என அறிய முடியவில்லை.மேலும் கணிணியில் ஒலி வந்தது ஆனால் யாருடனாவது head phone இல் chatல் பேசும் போது அதில் ஒலி வரவில்லை ஆனால் speakerல் வந்தது.இந்த இரு பிரச்சனைகளையும் இந்த slimdriver மூலம் எளிதாக தீர்க்க முடிந்தது. இந்த மென்பொருளின் இலவச பதிப்பே போதுமானது.


இந்த மென்பொருளை நிறுவிய பின் start scan என்பதை கிளிக் செய்தால் உங்கள் கணிணியில் இல்லாத அல்லது அப்டேட் செய்ய வேண்டிய டிரைவர்களை காட்டும்.அதில் உங்களுக்கு தேவையான டிரைவர்களை download update என்பதை கிளிக் செய்து நிறுவி கொள்ளவும்.

                                      Download for Windows 7, XP, and Vista


Read More »

இணையத்தில் வேகமாக உலாவ [ in slow connections ]

1 comments

 நாம் அனைவரும் இணையத்தில் வேகமாக உலாவுவதை தான் மிகவும் விரும்புகிறோம் . அனைவரும் அவரது சமூக வாழ்கையிலும் மற்றும் நடைமுறை வாழ்கையிலும் இணைவதற்கு இணையம் இன்றியமையாததாக மாறிவிட்டது.அதனால் அனைவருக்கும் வேகமான இணைப்பு வேண்டும் என்று தான் ஆசை படுகின்றனர்.இப்போது பல தொலைபேசி நிறுவனங்களும் பல வகையான இணைய இணைப்பை தருகின்றனர்.இப்பொழுது பல நிறுவனங்களும் இணைய இணைப்பை வேகமாக்குவதர்க்கு பணியாற்றிக் கொண்டு இருக்கின்றனர். எனவே இன்று நாம் நீங்கள் ஒரு மெதுவான இணைப்பில் இணையத்தை வேகமாக அணுகுவது எப்படி என்பதை பற்றி பேசுவோம்.



இணையத்தை வேகமாக அணுக இரண்டு வழிகள்

1.கூகிள் ஸ்லைசர் : 

இந்த கூகிள் ஸ்லைசர் என்ன செய்கிறது என்றால் உங்கள் வலைப்பக்கத்தில் உள்ள படங்களை தவிர்க்கிறது ( நீங்கள் விருப்ப பட்டால் )அதனால்உங்கள் வலைப்பக்கம் இலகுவாக மாறுகிறது இதனால் நீங்கள் விரைவாக அந்த பக்கத்தை பார்வையிடலாம். CLICK HERE TO GO.




2.TCP Optimizer :

TCP Optimizer ஒரு இலவச மென்பொருள் இது விண்டோஸ் இயங்குதளத்திற்காக உருவாக்கப்பட்டது இது உங்கள் கணினியின் இணைய இனைப்பை வேகமாக்கும்.இதை பதிவிறக்கி அதை ரன் செய்யவும்.அதற்க்கு முன்னர் உங்கள் இணைய உலாவிகளை மூடிக் கொள்ளவும்.
 CLICK HERE TO DOWNLOAD.

இதை பதிவிறக்கிக் கொள்ளுங்கள் பின்னர் நீங்கள் விண்டோஸ் 7 அல்லது விஸ்டா பயன்படுத்துபவராக இருந்தால் அதை வலது கிளிக் செய்து "RUN AS ADMINISTRATOR" என்பதை தேர்வு செய்யுங்கள் மற்ற இயங்குதளத்தில் நீங்கள் டபுள் கிளிக் செய்யுங்கள் பின்னர் கீழே உள்ளதை போல தோன்றும்.

அதில் உங்கள் பரோட் பேண்ட் கணக்கின் வேகத்தை(512KBPS,1MBPS,ETC) குறிப்பிடுங்கள் பின்னர் அதில் MODIFY ALL NETWORK ADAPTERS என்பதை தேர்வு செய்யுங்கள் பின்னர் கீழே OPTIMAL என்பதையும் கிளிக் செய்து விட்டு APPLY CHANGES என்ற பொத்தானை அழுத்தவும்.பின்னர் வரும் விண்டோவில் OK வை அழுத்தவும்.

உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளுங்கள் . பின்னர் WWW.SPEEDTEST.NET   என்ற வலைப்பக்கத்திற்கு சென்று உங்கள் இணையத்தின் வேகத்தை சோதித்து பாருங்கள் . TCP OPTIMIZER-ரை பயன்படுத்தும் முன்னும் உங்கள் இணைய வேகத்தை சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள்.


Read More »
back to top